லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

விராலிமலை அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, சிலை: ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு

விராலிமலை அருகே சோழர் கால கல்வெட்டு மற்றும் சிலைகளை ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்து ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர்.

News image

தென்னலூரில் செவ்வாய்க்கிழமை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சிலைகள்.

Updated On :21 மார்ச் 2017, 8:41 pm

விராலிமலை அருகே சோழர் கால கல்வெட்டு மற்றும் சிலைகளை ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்து ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் பழங்கால சிலைகள், கலவெட்டு தென்படுவதாக திருச்சி ஈ.வெ.ரா. கலைக்கல்லூரி மாணவர் சரவணன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், பட்டய மாணவி சந்தியா உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவினர், புதுகை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மலைக்குடிபட்டிக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்னலூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழ அரசர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த 4 கல்வெட்டுகளும், சிவன், பார்வதி, தட்சணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், ஆவுடையார் ஆகியோரின் கல் சிற்பங்களும், சிறிய நந்தி 3-ம், பெரிய நந்தி போன்ற தோற்றம் கொண்ட சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி கூறியது:
தென்னலூர் மாரியம்மன் கோவில் அருகே முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ள மடைக்கல் (மண்டபம்) முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளது. கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அவற்றின் இடிபாடுகள் அனைத்தும் ஊரின் கண்மாய் கரைப் பகுதியில் சிதைவுற்றும், சில கல் சிலைகள் நல்ல நிலையிலும் காணப்படுகிறது. கண்மாய் கரையில் காணப்படும் நந்தி, கொடும்பாளுர் நந்திக்கு அடுத்தப்படியான பெரிய நந்தி ஆகும். இந்த கண்மாயின் உள்பகுதிகளை அகழாய்வுக்கு உட்படுத்தினால், மேலும் புதையுண்ட சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்க முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.