’ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை நிறுத்த வேண்டும்: மக்களவையில் அதிமுக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் சிவகங்கை தொகுதி
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் சிவகங்கை தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் வலியுறுத்தினார்.
வர்தா புயல் நிவாரணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி.ஹரி, ’வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் மறுகட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நிதி உதவியாக ரூ.22,573 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.
கூடுதல் சிறப்பு நிதி: சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.சந்திரகாசி பேசுகையில், ’14-ஆவது நிதி ஆணையத்தின் எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு வருடாந்திர சிறப்பு நிதியை தலா ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரித்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
ஹெளரா ரயில்: திருவண்ணாமலை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.வனரோஜா ’முக்கிய யாத்திரை தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள ரயில் நிலையத்தில் புதுச்சேரி - ஹெளரா இடையே இயக்கப்பட்டு வரும் ஹெளரா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com