57,000 புதிய வீடுகள், உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை: அதிமுக அம்மா கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வீடில்லாத 57,000 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக (அம்மா) கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) அவைத் தலைவர் செங்கோட்டையன், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்,
ராயப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக (அம்மா) கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) அவைத் தலைவர் செங்கோட்டையன், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வீடில்லாத 57,000 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை, அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை (மார்ச் 27) வெளியிட்டார். 38 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை, கட்சியின் மூத்தத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் வெளியிட, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்
* ஆர்.கே.நகர் தொகுதியில் வீடில்லாத 57 ஆயிரம் பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
* தண்டையார்பேட்டையில் உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
* ஆர்.கே.நகர் தொகுதியில் 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்து தரப்படும்.
* வாரந்தோறும் குறைதீர் முகாம் நடத்தப்படும்.
* தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.
* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வங்கிகளில் கடன் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
* கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு நவீனமயமாக்கப்படும்.
* அரசு, தனியார் வங்கிக் கிளைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நவீனமயமாக்கப்பட்ட மீன் அங்காடி அமைக்கப்படும்.
* ஐஓசி பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும்.
* கொருக்குப்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
* ரூ.117 கோடி செலவில் எண்ணூர் - மணலி இடையே மேம்பாலம் அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com