ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முக்கியச் சாலைகளில் கண்காணிப்புக் கேமிரா: தேர்தல் ஆணையம் முடிவு

பணப்பட்டுவாடாவைத் தடுக்க ஆர்.கே.நகரின் முக்கியச் சாலைகள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

பணப்பட்டுவாடாவைத் தடுக்க ஆர்.கே.நகரின் முக்கியச் சாலைகள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இடைத் தேர்தலைக் கண்காணிக்க 3 பார்வையாளர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் கூடுதலாக நியமித்துள்ளது.
பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கியச் சாலைகள், சோதனைச் சாவடிகளில் கேமரா பொருத்தப்படும். 256 வாக்குச்சாவடி மையங்களில், வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாதிரி வாக்குப்பதிவு மையமும் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, தேர்தல் முடியும் வரை தலா 2 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பறக்கும் படையினர் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்துவார்கள்.
தொகுதிக்கு வெளியே பணப்பட்டுவாடாவைத் தடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல், வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க 5 வருவாய்த் துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com