தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா (83) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
திமுகவில் இருந்த குழ.செல்லையா, கடந்த 1971-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அதிமுகவில் இணைந்து மாநில விவசாயப் பிரிவுச் செயலாளராக இருந்தார்.
குழ.செல்லையாவுக்கு செல்வி, புலவர் பூங்கோதை ஆகிய இரு மனைவிகள். இவர்களுக்கு குழ.செ.அருள்நம்பி, அன்புச்செல்வன், வளையாபதி ஆகிய 3 மகன்களும், அரும்பு, அமுதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
குழ.செல்லையாவின் இறுதி சடங்குகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) மாலை 3 மணிக்கு அவரது சொந்த ஊரான பேராவூரணியை அடுத்த முதுகாடு கிராமத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 98651 64567.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூா் அருகே கண்டெய்னா் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்: 10 போ் காயம்

மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்

மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
கள்ளச்சாராயம் கடத்திய 4 போ் கைது
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



