இசையமைப்பாளர் கோவர்த்தன் காலமானார்

பழம் பெரும் இசையமைப்பாளர் கோவர்த்தன் (91) சேலத்தில் திங்கள்கிழமை காலாமானார்.
இசையமைப்பாளர் கோவர்த்தன் காலமானார்

பழம் பெரும் இசையமைப்பாளர் கோவர்த்தன் (91) சேலத்தில் திங்கள்கிழமை காலாமானார்.
செவித்திறன் குறைபாட்டால் அவதியுற்று வந்த கோவர்த்தன், சில மாதங்களுக்கு முன்பு படுக்கையில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு மாதங்களாக எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோவர்த்தன், பிரபலமாக இருந்த பழம் பெரும் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனத்தின் சகோதரர் ஆவார். இளமையிலேயே இசையில் நாட்டம் கொண்ட கோவர்த்தன், பாடல்களுக்கான இசைக் குறிப்புகளை எழுதுவதில் கை தேர்ந்தவராக விளங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதியவர் கோவர்த்தன். 
இசையமைப்பாளர்கள் பிரியா சுப்புராம், ஆர். சுதர்சனம், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், விஜயபாஸ்கர், இளையராஜா, சந்திரபோஸ், தேவா உள்ளிட்டோரின் பாடல்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதியுள்ளார். கைராசி, பட்டணத்தில் பூதம், அஞ்சல் பெட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 
சென்னையில் வசித்து வந்த கோவர்த்தன், முதுமை காரணமாக சேலத்துக்கு இடம் பெயர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக கோவர்த்தன் வறுமையில் வாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து ரூ. 10 லட்சத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சேலம் - திருச்சி சாலையில் உள்ள குகை பகுதியில் உள்ள இல்லத்தில் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சேலம் சின்மயி மின் மயானத்தில் கோவர்த்தனின் உடல் செவ்வாய்க்கிழமை (செப்.19) மாலை தகனம் செய்யப்படுகிறது. தொடர்புக்கு - 99526-97577 .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com