முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் சுற்றுலாவுக்கு இணைய சேவை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா செல்ல இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலா இணைய முகப்புப் பக்கம்
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலா இணைய முகப்புப் பக்கம்
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா செல்ல இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான வகையில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 895 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு ஆயிரக்கணக்கான வகை மூலிலிகைகள், அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள் உள்ளிட்டவை உள்ளன. இயற்கையாக அமைந்துள்ள களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, பாண்டியன் கோட்டை, சொரிமுத்து அய்யனார் கோயில் உள்பட பல சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. 
முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் சூழல் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் பார்கவ தேஜா கூறியது: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள http://www.kmtrecotourism.com  என்ற இணையதள முகவரி மூலம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். பின்னர், அவரவர் விருப்பம், வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்று முதல் 3 நாள் வரை தங்கி சுற்றுலா செல்லும் திட்டங்கள் உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இங்கு பல வசதிகள் செய்ய திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றைப் பயன்படுத்தி மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசிப்பதுடன், அதன் வளங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் வனப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். சுற்றுச்சூழல், வன உயிரின ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com