சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சென்னை சிறுமி: துவங்கியது சிறப்பு மருத்துவ சிகிச்சை   

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சென்னை சிறுமிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை துவங்கியது.

Updated On :

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சென்னை சிறுமிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை துவங்கியது.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவரை, அங்கிருக்கும் லிப்ட் ஆபரேட்டர், ப்ளம்பர் உள்ளிட்ட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக 17 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சென்னை சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு வியாழன் அன்று உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் புதன்கிழமை அன்று முறையிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானரஜி கூறுகையில், "இந்த விவகாரத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்படும். நாடு முழுவதும் வன்கொடுமை வழக்கில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்" என்றார்.

அதன்படி தற்பொழுது உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, மாநில குழநதைகள் ஆணையத்தின் உதவியுடன் இந்த சிறப்பு மருத்துவ குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவர் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு  காவல்துறை பாதுகாப்புடன், ரகசிய இடத்தில் உரிய சிகிச்சை அளிக்கும் பணி வெள்ளியன்று துவங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.