சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடலாமா என்று எழும்பூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை ஏன் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றட்டுமா? என சென்னை மாத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் காட்டமாகக் கேட்டனர்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளி தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் நேரடி நியமன எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16-இல் நடத்தப்பட்டது. முறைகேடு புகார் காரணமாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் எழுந்ததாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தோருக்கு, மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (இரண்டு, மூன்றாம் பாகங்கள்)
மு.க. ஸ்டாலின் - விஜய் சந்திப்பு!

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

பெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோ
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

