தாமிரவருணி நதியில், வரும் அக்டோபர் மாதம் "தாமிரவருணி புஷ்கரம்' விழா நடத்துவது தொடர்பாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில், சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் தாமிரவருணி நதியில் புஷ்கரம் விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை மாநில செய்தி மையத்தில் நடைபெற்றது.
144 ஆண்டுகளுக்குப் பிறகு: தாமிரவருணி நதியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அக்டோபரில் கொண்டாடுவது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், விழாவின்போது பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, சாலை வசதி, தெரு
விளக்குகள், பேருந்து வசதி, வாகனங்கள் நிறுத்துமிட வசதி உள்ளிட்டவற்றை
மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆலோசனைக்கேற்ப விழாவை சிறப்பாக மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கடம்பூர் சி.ராஜு, வி.எம்.ராஜலட்சுமி, சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, இந்து சமய அற நிலையத் துறை
ஆணையாளர் ஆர்.ஜெயா, செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலாளர் வெங்கடேசன், செய்தித் துறை இயக்குநர் பொ.சங்கர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.