கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை தொடரும்: பாலச்சந்திரன்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2018, 7:00 am

DIN


சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரையில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக  அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும் உள் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாகவும், தென் தமிழகத்தின்  ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழைபெய்யக் கூடும்.

மீனவர்களைப் பொறுத்தவரை தெற்கு ஆந்திரா, தமிழகக் கடற்கரை  பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை தொடரும். மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்துக்குக் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.