பலா மரம் பயிரிடுங்க...!

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பூச்சி தாக்காத ஒரே பழம் பலாச்சுளைதானாம்..!
பலா மரம் பயிரிடுங்க...!
Published on
Updated on
1 min read

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பூச்சி தாக்காத ஒரே பழம் பலாச்சுளைதானாம்..!
பெங்களூரு ஹசரகட்டாவில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்து கூறியுள்ளது.
இதைவிட முக்கிய விஷயம் கர்நாடகாவில், பல இடங்களில் தற்போது கொட்டையில்லா பலாச்சுளை தரும் மரங்கள் பயிரிடப்பட்டு சுளைகள் விற்பனைக்கும் வந்துள்ளது.
இந்த இரண்டு காரணங்களால் வடநாட்டிலும் மேலை நாடுகளிலும் பலாச்சுளை விற்பனை அமோகமாக உள்ளது.
உலர்ந்த சீதோஷ்ண நிலை கொண்ட பகுதியில், தற்போது வயல்களில் பலா  கன்றுகளை நட்டு நல்ல மகசூல் பார்ப்பதும் அமோகமாக நடக்கிறது...!
தற்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் பலாச்சுளை மட்டன்... பலாச்சுளை சிக்கன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. டயட்டில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள், பலாச்சுளை சார்ந்த பண்டங்களை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஏன்?
 இதில் ஃகிளிசெமிக் (glycemic) மிகக் குறைந்த அளவே உள்ளது. அதேசமயம் நார்ச்சத்து கூடுதலாக உள்ளது. இது எடைக் குறைப்புக்கும் நல்லது.
பெங்களூரில் பல ஹோட்டல்களில், மைசூர் தோசை ஆர்டர் செய்தால் அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவுக்குப் பதில் பலாச்சுளை மசாலாவை இணைத்துத் தருகின்றனர். 
 நமது  விவசாயிகளும் குறிப்பாக உலர் சூழல் உள்ள பகுதிகளில் பலா மரங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலுடன் வடநாட்டிற்கு ஏற்றுமதி செய்து நல்ல வருமானமும் பார்க்கலாமே...!
- ராஜிராதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com