சிலிகான் வேலி தொழில் அதிபர்களுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் சிலிகான் வேலியைச் சேர்ந்த தொழில் துறை தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சிலிகான் வேலி தொழில் அதிபர்களுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் சிலிகான் வேலியைச் சேர்ந்த தொழில் துறை தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
"மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலின்போது, தொழில்துறைத் தலைவர்களுடன் முரண்பட்ட வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்த அவர், முதல் முறையாக அவர்களைச் சந்தித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள "டிரம்ப் டவர்ஸ்' கட்டடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது:
நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புத்தாக்கத் திட்டங்களை வகுக்கவும் ஆலோசிப்பற்காக, இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. குறிப்பாக, இங்குள்ள பணிக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு நீங்கள் (தொழில் துறை தலைவர்கள்) தரும் ஆலோசனைகளை திறந்த மனதோடு கேட்பதற்கு விரும்புகிறேன். இதற்காக, எந்த நேரத்திலும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், எல்லை கடந்து வெளிநாடுகளில் தொழில் செய்யும்போது பல்வேறு கட்டுப்பாடுகளையும் பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றன. இந்தப் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும் என்றார் அவர்.
அந்தக் கூட்டத்தில், "மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, "ஆப்பிள்' நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவர்கள் லாரி பேஜ், எரிக் ஸ்மித் மற்றும் ஐபிஎம், ஃபேஸ்புக், சிஸ்கோ, அமேஸான், ஆரக்கிள், இண்டெல், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com