தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வட கொரியா அடையாளம் தெரியாத பல ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி பரிசோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து கடலில் செல்லும் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனை கேங்வோன் மாகாணம் வொன்சன் நகரத்துக்கு அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கண்காணிப்பு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து வாரங்களில் வட கொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை எச்சரிக்கைகளை மீறி வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தவா் கைது

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் பங்கேற்பு

மாமல்லபுரம் தொல்லியல் பணியாளா்கள் - சுற்றுலா வழிகாட்டிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: எஸ்.பி. அறிவுறுத்தல்

மகாத்மாவின் ஏக்கம் தீர்ந்தது!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



