/
- குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிட்டைக் கழுவக் கூடாது. கீழே போடவும் கூடாது.
- முகம் பார்க்கும் கண்ணாடியை நாளிதழ் காகிதத்தால் துடைத்தால் பளபளப்பாகும்.
- எண்ணெய் மற்றும் நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்த பிறகு சோப்பினால் கழுவினால் சுத்தமாகும்.
- உப்பு கலந்த நீரில் துணியை முக்கி வைத்து பத்து நிமிடத்துக்குப் பிறகு அலசினால் காபிக் கறை மறைந்து போகும்.
- முட்டைக் கோஸ் சமைக்கும் போது எலுமிச்சை சாறு சிறிது சேர்த்தால் கோஸ் வாசனை வராது.
- சாதம் செய்யும் போது இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால் பிரியாணி கட்டி தட்டிப் போகாமல் இருக்கும்.
- வெங்காயத் துண்டுகளை உப்பு தடவி பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்தால் நன்றாக வறுபடும்.
- பாயசம் வைக்கும் போது பாசிப்பருப்போடு அரிசியோ, ஜவ்வரிசியோ நன்றாக வேக வைத்த பிறகுதான் இனிப்பு சேர்க்க வேண்டும் .
- முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால் தேங்காய் எண்ணெய் காராமல் இருக்கும்.
- உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேஜையில் ஈக்கள் தொல்லை குறையும்.
- கொதி நீரில் முக்கி எடுத்தால் போதும் தக்காளியின் தோல் எளிதாக வந்துவிடும்.
- சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து கொதிக்க வைத்தால் நெய் கெடாமலிருக்கும்.
- உப்பு கலந்த குளிர்ந்த நீரில் துணியை முக்கி வைத்த பிறகு சோப்பு உபயோகித்தால் துணி மீது படிந்த வாழைக்கறை மறையும்.
- கடலை மாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.
- பருப்பை வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
- வெங்காயத்தை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பிறகு தோல் களைந்து நறுக்கினால் கண்ணிலிருந்து நீர் வராது.
- நெ.இராமன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


