திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

50. தூண்டு சுடர்மேனி - பாடல் 6

தனது கை தொட்டவுடனே, தனது நோக்கத்தை

Updated On :28 பிப்ரவரி 2017, 12:05 pm

தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்திச் சுடர் கொன்றைத்
            தார் அணிந்து சுவைகள் பேசி
பட்டி வெள்ளேறு ஏறிப் பலியும் கொள்ளார் பார்ப்பாரைப் பரிசு
                அழிப்பார் ஒக்கின்றாரால்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக் கருத்து அழித்து
        வளை கவர்ந்தார் காலை மாலை    
விட்டிலங்கு சடைமுடியர் வேதநாவர் வெண்காடு மேவிய
                விகிர்தனாரே
 

விளக்கம்

தொட்டு இலங்கு = கையால் தொட்டு ஏவப்பட்ட பின்னர், அந்த நோக்கத்தினை நிறைவேற்றும். பட்டி = தொழுவம். பெருமானிடம் தனது உள்ளத்தை இழந்ததை முந்தைய பாடலில் வெளிப்படுத்திய அப்பர் நாயகி, தான் அவ்வாறு தனது உள்ளத்தை இழந்து பெருமான் மீது காதல் கொண்டதன் காரணத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றாள் போலும். தானென்ன, பெருமானைக் கண்டவர் எவராயினும், அவரது அழகில் மயங்கி தங்களது உள்ளத்தை இழந்துவிடுவார்கள் என்று முடிவு செய்து தன்னைத் தேற்றிக்கொள்கின்றாள். அந்த எண்ணத்தை இங்கே வெளிப்படுத்துகின்றாள். உள்ளத்தளவிலும் கற்பு நிலை தவறாமல் வாழ்ந்த நிலை பண்டைய தமிழகப் பெண்களின் இயல்பு. அந்த தன்மையினை மற்ற அணிகலன்களை விடவும் உயர்ந்த சிறந்த அணிகலனாக கருதி வாழ்ந்தவர்கள் பண்டைய தமிழர்கள். எனவே தான் தனது மனம் பேதலிக்கப்படும் விதத்தில், பெருமானின் அழகு இருந்ததை எண்ணி, தனது கருத்து அழிந்ததாக இங்கே அப்பர் நாயகி கூறுகின்றாள்.

பொழிப்புரை

தனது கை தொட்டவுடனே, தனது நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் மழு மற்றும் திரிசூலம் ஆகிய படைக் கலன்களை ஏந்திய கையராய், ஒளிவீசும் கொன்றை மாலையை அணிந்தவராய், வீட்டுத் தொழுவங்களில் கட்டப்படும் எருதினைத் தனது வாகனமாக ஏற்றவராய், எனது இல்லத்திற்கு பலியேற்க வந்த பெருமான், நான் அளித்த பிச்சையினை ஏற்காமல், சுவையாக இருபொருள் பட என்னிடம் பேசினார். தன்னைப் பார்ப்பவர்களின் மனதினில், தன் மீது தீராத காதல் ஏற்படும் வண்ணம் மிகவும் அழகுடன் விளங்கிய பெருமான், தனது மேனியில் வெண்ணீற்றினை பூசி இருந்தார். அவரது சுவையான பேச்சு, எனது உள்ளத்தில் காமக்கனலை மூட்டியது; அந்நாள் வரையில் மிகுந்த அடக்கத்துடன் இருந்த எனது உள்ளம், தனது பண்பினை இழந்து எப்போதும் அவரையே நினைக்கத் தொடங்கியது. அவரை அடையாத ஏக்கத்தில் எனது உடல் இளைத்து, எனது கைவளைகள் கழன்றன. இவ்வாறு என்னை வருத்தத்தில் ஆழ்த்திய பெருமான், காலை மாலை எப்போதும் மின்னுகின்ற சடைமுடியை உடையவர்; எப்போதும் வேதங்கள் ஓதுபவராய் இருப்பவர்; அவர் வெண்காடு தலத்திற்கு சென்று, அங்கே பொருந்தி உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.