ஸ்ரீ கிருஷ்ண கான சபை அறக்கட்டளை மற்றும் யக்ஞராமன் கலை மையம் சார்பில் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெற உள்ளது.
தி.நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபையில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உருவப் படத்துக்கு அவரது ரசிகர்கள் மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ண கான சபையின் தலைவர் நல்லி குப்புசாமி செட்டி, பொதுச் செயலர் ய.பிரபு, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், குரு காரைக்குடி ஆர்.மணி, கல்கி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவைப் போற்றும் வகையில் கர்நாடக இசைக் கலைஞர் சாஸ்வதி பிரபு குழுவினரின் இசை நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



