சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

சென்னை விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :23 ஆகஸ்ட் 2017, 3:30 am IST

சென்னை விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம் அருணாச்சலம் பிரதான சாலைப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது தளத்தில் வசிப்பவர் கவிதா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த கவிதா திடீரென கீழே குதித்தார். தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த காரின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் கவிதாவை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.