புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திருப்பரங்குன்றம் தாலுகாவில் வாக்காளர் பெயர் சேர்க்க 986 பேர் மனு

திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் நடைபெற்ற வாக்களர்கள் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் 986 பேர் மனு செய்துள்ளனர்.

Updated On :26 ஜூலை 2017, 1:31 am

திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் நடைபெற்ற வாக்களர்கள் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் 986 பேர் மனு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உள்பட்ட 123 வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் திருத்தம் உள்ளிட்டவைகள் செய்ய சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு  திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகசெல்வி மேற்பார்வையிட்டார்.
முகாமில் புதிய வாக்காளர்களாக சேர்க்க 986 பேர் மனு செய்துள்ளனர். 48 பேர் பெயர்  நீக்குதல், பெயர் திருத்தம்  செய்ய 111 பேர், முகவரி மாற்றம் செய்ய 63 பேர் மனு செய்துள்ளனர். இந்த முகாம் வருகின்ற 31 ஆம் தேதி வரை தாலுகா அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெறும். இதனை வாக்காளர்கள்  பயன்படுத்திக் கொள்ளவேண்டும்  என வட்டாட்சியர் சரவணபெருமாள் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.