மோசடி வழக்கு: நடிகை லீனா மரியா பவுலின் நண்பர் கைது

சென்னை வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை லீனா மரியா பவுலின் நண்பரான சந்திரசேகர் கொல்கத்தாவில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை தில்லி போலீஸார் தில்லிக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனர். இவர் தமிழக

சென்னை வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை லீனா மரியா பவுலின் நண்பரான சந்திரசேகர் கொல்கத்தாவில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை தில்லி போலீஸார் தில்லிக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனர். இவர் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

இந்த வழக்கில் நடிகை லீனா மரியா பவுலை தில்லி போலீஸார் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி கைது செய்தனர். அப்போது உடனிருந்த சந்திரசேகர் தப்பிவிட்டார். இவரை தில்லி போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த கைது தொடர்பாக தெற்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் பி.எஸ். ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

லீனா மரியா பவுலை கைது செய்தபோது, சந்திரசேகரைப்போல உருவம் கொண்ட ஓட்டுநர் இருந்தார். இதனால், பண்ணை வீட்டிலிருந்து தப்பித்த சந்திரசேகரைத் தேடும் பணி ஆய்வாளர் வேத் பிரகாஷ் தலைமையில் முடுக்கிவிடப்பட்டது.

தில்லியிலிருந்து விமான மூலம் இந்திய - நேபாள எல்லைக்குச் சென்று பதுங்கினார். அவர்  மேற்கு வங்கம் மாநிலம், சிலிகுரி நகரத்துக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். சிலிகுரியிலிருந்து கொல்கத்தாவுக்கு சென்ற அவரை தில்லி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர் என்றார்.

சந்திரசேகர் தில்லியிலுள்ள வியாபாரியிடம் ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து ரூ. 60 லட்சம் ஏமாற்றியதாகவும், ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்க உதவுவதாகக் கூறி 3 இளைஞர்களிடம் தலா ரூ. 3 லட்சம் பெற்று  மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரூ. 19 கோடி மோசடி செய்து விட்டு தெற்கு தில்லி ஃபதேபூர் பேரியில் நடிகை லீனா மரியா பவுலுடன் தங்கியிருந்தார்.

இதையறிந்த தில்லி போலீஸாரும், தமிழக போலீஸாரும் லீனா மரியா பவுலை கடந்த மே மாதம் 28-ஆம் தேதி கைது செய்தனர். இவர்கள் தங்கியிருந்த பண்ணை வீட்டிலிருந்து விலை உயர்ந்த கார்களையும் செல்ஃபோன்களையும் போலீஸார் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com