மைல் கல்லில் எழுதுவது ஹிந்தித் திணிப்பு அல்ல

தமிழகத்தில் சாலையோர மைல் கல்லில் எழுதுவது ஹிந்தித் திணிப்பு அல்ல என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் சாலையோர மைல் கல்லில் எழுதுவது ஹிந்தித் திணிப்பு அல்ல என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
 கன்னியாகுமரி நரிகுளத்தில் ரூ. 21 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை நான் மூன்று முறை சந்தித்துள்ளேன். மத்திய நிதி அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரும் சந்தித்துள்ளனர். இது மாநில அரசு சம்பந்தமான பிரச்னை.
உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்துகின்றனர். வங்கிக் கடன் ரத்து என்பது மத்திய அரசு யோசித்து செய்ய வேண்டிய விஷயம்.
விவசாயிகளின் உண்மையான நிலையை மேம்படுத்துவதற்காக செய்ய வேண்டியது. ஒரு போராட்டம் நடத்தி இதனை செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் கண்டிப்பாக நடக்க வேண்டும். அங்கு பணப் பட்டுவாடா நடந்தால் அதைத் தடுக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தமிழகத்தில் மைல் கல்லில் ஹிந்தி எழுத்துகள் பொறிப்பது தொடர்பான ஆணை கடந்த 24.12.2004இல்
பிறப்பிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் இருந்தது திமுக ஆட்சி. காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தவர் டி.ஆர்.பாலு. இந்தப் பிரச்னையில் திமுக தற்போது இரட்டை வேடம் போடுகிறது. இதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அக் கட்சியில் இருந்து டி.ஆர்.பாலுவை நீக்குவாரா?
ஹிந்தியில் எழுதுவது என்பது ஹிந்தித் திணிப்பு அல்ல. பிற மாநில வாகன ஓட்டிகள் நம் மாநிலத்துக்குள் வரும்போது எந்த ஊருக்குச் செல்வது என்று வழிகாட்டுவதற்காகத்தான் மைல் கல்கள் அமைக்கப்பட்டன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com