கொடுமுடியாறு அணையை திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
பாசனத்துக்கு கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


பாசனத்துக்கு கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கொடுமுடியாறு அணை பாசன விவசாயிகள் திங்கள்கிழமை குறை தீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், திருக்குறுங்குடியிலுள்ள கொடுமுடியாறு அணையின் மூலம் அப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
தென்மேற்கு பருவம், வடகிழக்கு பருவம் ஆகிய பருவக் காலங்களில் மழை பொய்த்ததால் கொடுமுடியாறு அணைப் பாசனத்தில் ஒரு வருடங்களுக்கு மேலாக சாகுபடி செய்ய முடியாத நிலை உருவானது.
இப்பகுதியில் சாகுபடி செய்த வாழைப் பயிர்களும் நீரின்றி கருகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 36 அடியாக உள்ளது. இப்பகுதியில் கிணற்று பாசனத்தில் மூலம் தொடர்ந்து சாகுபடி செய்ய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே, கொடுமுடியாறு அணைப் பாசனத்தில் சாகுபடி செய்ய வசதியாக படலையார்குளம் கால்வாய், வள்ளியூரான் கால்வாய், மற்றும் ஆற்றுப் பாசனத்திற்கும் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரள் மண் எடுக்க அனுமதி: இதனிடையே, கிணறுகள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள், அவர்களது சொந்த கிணறுகளில் இருந்து சரள் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.எஸ். மாடசாமி தலைமையில் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அமைச்சரிடம் மனு: திருநெல்வேலி கால்வாய் பகிர்மானக்குழுத் தலைவர் ரா. சொக்கலிங்கம், அமைச்சர் வி.எம். ராஜலட்சுமியிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி கால்வாய் பாசனத்தில் நயினார்குளம், சேந்திமங்கலம் குளம், அருகன்குளம், அயன் அழகனேரிகுளம், வண்ணாம்பச்சேரி குளம், ராஜவல்லிபுரம் குளம், காட்டாம்புளி குளம், பாலாமடை குளம், உண்டாலிகுளம், மூனாம்புளிகுளம், கட்டளைகுளம், கல்குறிச்சிகுளம், குப்பக்குறிச்சி குளம், அலங்காரப்பேரி குளம் ஆகிய 14 குளங்கள் மூலம் 6500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கால்வாயில் தண்ணீர் திறந்தால்தான், நாற்றுப் பாவுதல் போன்ற சாகுபடிப் பணியை விவசாயிகள் தொடங்க முடியும். ஆகவே, திருநெல்வேலி கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...