மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுரியின் 11ஆவது பட்டமளிப்பு விழாவில், 1,340 மாணவர்களுக்கு பட்டங்களை,

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுரியின் 11ஆவது பட்டமளிப்பு விழாவில், 1,340 மாணவர்களுக்கு பட்டங்களை, மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் வழங்கினார்.
 மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டில் படிப்பை நிறைவு செய்த 1340 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி துணைவேந்தர் அனிஷா பேசியதாவது:
 தற்போதைய காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், சமுதாய வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு முக்கியமானதாகும். எனவே, தாங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.
 கல்லூரி தலைவர் எம்.தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்வி.சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலர் கே.நாராயணசாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் கே.வெங்கடாசலபதி வரவேற்றார்.
 புதுச்சேரி பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை கைப்பற்றியவர்களுக்கு பரிசுத் தொகையாக 47 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
 இயக்குநர் ராஜகோவிந்தன், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மலர்க்கண் உள்பட பலர் பங்கேற்றனர். கட்டடவியல் துறைத் தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com