ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முறையான அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையாகும். ஆனால், தமிழகத்தில் முதலாவது தகுதித் தேர்வு 2012-ஆம் ஆண்டில் ஜூலை, அக்டோபர் மாதங்களிலும், 2013-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திலும் என 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், பாண்டியராஜன் கூறுகையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை செல்லும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் நடத்தப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விபு நயர் சனிக்கிழமை வெளியிடவுள்ளார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!

செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! - அரசு அறிவிப்பு
ஐ.நா. ஆய்வாளர்கள் அணுசக்தி தளங்களைப் பார்வையிடத் திட்டமிடவில்லை: ஈரான்

2 கோல்கள், ஆட்ட நாயகன் விருதுகள்: ஒரே மாதிரி அசத்திய மூன்று நட்சத்திர வீரர்கள்!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46




