காஞ்சிபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு ஷிப்ட் முறையில் பணிபுரிய தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு ஷிப்ட் முறையில் பணிபுரிய தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதிவாய்ந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் ஐடிஐ பிரிவில் வெல்டர், பிட்டர், டிரேட் ஆகிய ஏதோ ஒரு பிரிவில் முடித்து 2 வருட தொழில் அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: பழங்குடியினர் 35, ஆதிதிராவிடர் 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32, பிற்படுத்தப்பட்டோர் 32, இதர வகுப்பினர் 30-க்குள் இருத்தல் வேண்டும்.
மேலும், காலி பணியிடங்கள் முற்றிலும் தாற்காலிகமானது. தகுந்த கல்விச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாக நவம்பர் 30 அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத விண்ணப்பங்களுக்கு எந்த அறிவிப்பும் அனுப்பப்பட மாட்டாது.
மேற்படி, பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும். பணியிடங்களுக்கு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடாது. பணியிடங்களை கூட்டவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ, மாற்றியமைக்கவோ குறித்த முழு அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்பட்டது.
மேற்கண்ட தகுதிகளையுடைய நபர்கள், துணை ஆட்சியர், மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், வந்தவாசி ரோடு, பல்லவன் நகர், காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியில் விண்ணப்பத்தை நவம்பர் 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27237135 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூலை 1 - நேரலை

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி; 15-க்கும் மேற்பட்டோர் காயம்

கருணாநிதியுடன் பகைமைக்குக் காரணம் என்ன? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 2

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 1)
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


