டிஎன்பிஎஸ்சி, டெட் தேர்வுகளுக்கான வினா - விடை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும்
டிஎன்பிஎஸ்சி, டெட் தேர்வுகளுக்கான வினா - விடை
Published on
Updated on
2 min read

 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக தினமணி இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள். வாழ்த்துகள்...

  1. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் - உ. வே. சாமிநாதன்
  2. உ.வே.சா தம் வாழ்க்கை வரலாற்றை என்சரிதம் எனும் பெயரில் வெளியிட்ட இதழ் - ஆனந்த விகடன்
  3. உ.வே.சா-வின் இயற்பெயர் - வேங்கடரத்தினம்
  4. உ.வே.சா-வின் ஆசிரியர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  5. வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் - இராமலிங்க அடிகளார். 
  6. ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசம் ஆகிய நூல்களின் ஆசிரியர் - இராமலிங்க அடிகளார்
  7. சமரச சன்மார்க்க நறியை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்
  8. இராமலிங்க சுவாமிகள் சரிதம் எனும் நூலை எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார்
  9. நான் கண்ட பாரதம் எனும் நூலை எழுதியவர் - அம்புஜத்தம்மாள்
  10. காந்திபுராணம் இயற்றியவர் - அசலாம்பிகை அம்மையார்.
  11. காந்திபுராணத்தின் பாட்டுடைத்தலைவர் - மகாத்மா காந்தி
  12. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி
  13. சிவகங்கையை ஆண்ட மன்னர் -  முத்து வடுக நாதர்
  14. அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் - லீலாவதி
  15. தென்னாட்டின் ஜான்சிராணி என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் - அஞ்சலையம்மாள்
  16. சீனுவாச காந்தி நிலையம் அமைத்தவர் - அம்புஜத்தம்மாள்
  17. வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு கி.பி. 1730
  18. மறைமவையடிகள் எழுதிய நாடகம் - சாகுந்தலம்
  19. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் - அடியார்க்கு நல்லார். 
  20. நாடகமேத்தும் நாடகக்கணிகை எனக்குறிப்பிடப்படுபவர் - மாதவி
  21. தமிழ்நாடு மறுமலர்ச்சித் தந்தை - கந்தசாமி
  22. தேம்பாவணி நூலின் ஆசிரியர் - வீரமாமுனிவர்
  23. வீரமாமுனிவரின் இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  24. வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி
  25. திருமந்திரத்தை இயற்றியவர் - திருமூலர்
  26. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தொடர் இடம் பெறுவது - திருமந்திரம்.
  27. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படுவது - திருமந்திரம்
  28. சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை - திருமந்திரம்
  29. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல் - புறநானூறு
  30. காவடிச்சிந்து பாடியவர் - அண்ணாமலையார்
  31. மூவருலா இயற்றியவர் - ஓட்டக்கூத்தர்
  32. பொன்வேய்ந்த சோழன் - முதலாம் பராந்தகன்
  33. குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் - கபிலர்
  34. நாலடிநானூறு என்ற சிறப்புப்பெயர் பெற்ற நூல்  - நாலடியார்
  35. தமிழ்மகள் - ஔவையார்
  36. குறிஞ்சிப்பாட்டு 99 வகையான பூக்களைக் குறிப்பிடுகின்றது. 
  37. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் - விளம்பிநாகனார்
  38. குற்றாலக்குறவஞ்சியின் ஆசிரியர் - திருகூடராசப்பகவிராயர்.
  39. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரநாத்
  40. பாண்டியன்பரிசு, அழகின்சிரிப்பு, குடும்ப விளக்கு ஆகியவற்றின் ஆசிரியர் - பாரதிசாசன்
  41. பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
  42. சாதி இரண்டொழில வேறில்லை என்றவர் - பாரதியார்
  43. புதுக்கவிதை புனைவதில் புகழ்பெற்றவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்.
  44. சாகுந்தலம் நாடகத்தின் ஆசிரியர் - முன்னுறைஅரையனார். 
  45. போரும் அமைதியும் எனும் நாவலின் ஆசிரியர் - டால்ஸ்டாப்
  46. துண்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் - இராமச்சந்திர கவிராயர்
  47. பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் - உடுமலைநாராயணகவி
  48. புதியவிடியல்கள், இது எங்கள் கிழக்கு ஆகிய நூல்களின் ஆசிரியர் - தாராபாரதி.
  49. தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க. முத்துராமலிங்கத்தேவரை பாராட்டியுள்ளார்.
  50. மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
  51. சங்ககால பெண்புலவர்களில் மிகுதியான பாடல்கள் பாடியவர் - ஔவையார். 
  52. ஆலாபனை, சுட்டுவிரல், பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன் ஆகிய படைப்புகளின் ஆசிரயர் - அப்துல்ரகுமான். 
  53. திரு.வி.க. இயற்றிய பொகுமையேவேட்புல எனும் தலைப்பில் உள்ள பாக்களின் எண்ணிக்கை - 430
  54. திரு.வி.கலியானசுந்தரனார் பிறந்த ஊர் - துள்ளம் (தற்போ தண்டலம்) காஞ்சிபுரம் மாவட்டம்.
  55. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின்பெருமை, தமிழ்தென்றல், உரிமைவேட்கை, முருகன் அல்லது அழகு ஆகிய நூல்களின் ஆசிரியர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
  56. திருக்குறல் 107 மொழிகலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
  57. குறள் வெண்பாக்களால் ஆன நூல் - திருக்குறள்
  58. தமிழ் பிறமொழித்துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமல்லாமல் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர் - கால்டுவெல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com