எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தில்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: தருண் விஜய் தலைமையில் வடமாநில இளைஞர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் தலைமையில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தில்லியில் புதன்கிழமை மெழுகுவர்த

News image

தில்லியில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தமிழ் மாணவர்களுடன் புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய்.

Updated On :29 ஜனவரி 2024, 4:17 pm IST

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் தலைமையில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தில்லியில் புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு கோஷமிட்டனர்.
தில்லி மீனா பாக் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி, தேரி உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது, "எனது உயிர் ஜல்லிக்கட்டு', "தமிழக மக்களின்-இந்தியாவின் அடையாளம் ஜல்லிக்கட்டு' என்று கோஷமிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தருண் விஜய் கூறியதாவது: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. சங்க கால இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன. ஜல்லிக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வீர மிக்க மக்களின் விளையாட்டாக பாராட்டுப் பெற்றது. ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் காளை சிவனின் வாகனமாகவும் திகழ்கிறது. காளையை அடக்கும் நிகழ்வானது நமது நாகரிகத்தின் ஒரு பகுதி. இது தமிழ் மக்களின், இந்திய நாட்டின் அடையாளம்.
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு என்பது இந்தியாவின் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கலாசாரத்தின் மீதான எதிர்ப்பாகும். ஜல்லிக்கட்டை எதிர்க்கும் நபர்கள் இந்தியாவின் செறிந்த கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் அறியாதவர்கள். அவர்கள் விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுபவர்கள். தமிழ் பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள்.
ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி போராட்டம் நடத்தும் தமிழக மக்களும், இளைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் காட்டுவதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக எங்கள் முழு ஆதரவையும் தர உள்ளோம்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டு வருகிறது. அது தொகுப்பாக தமிழக ஆளுநரிடம் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்தும் முறையிடப்படும். ஜல்லிக்கட்டு நடவடிக்கையை தேசிய அளவில் ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.