மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக்குவது குறித்து அக்கட்சியின் தலைமைக் குழு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
மார்க்சிஸ்ட் விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் ஒருவர் மாநிலங்களவை எம்.பி.யாக முடியாது. அதன்படி, சீதாராம் யெச்சூரிக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து யெச்சூரி எம்.பி.யாக்கப்பட்டுள்ளதால் அங்கு காலியாகும் இடத்துக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம்.
அந்த மாநில பேரவையில் இடதுசாரி முன்னணிக்கு 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், மாநிலங்களவை எம்.பி.யாக ஒருவரைத் தேர்வு செய்ய அந்த எண்ணிக்கை போதாது. இருப்பினும், காங்கிரஸின் ஆதரவுடன் யெச்சூரியை மூன்றாவது முறையாக எம்.பி.யாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தலைமைக் குழு உறுப்பினர்கள் நால்வர் சீதாராம் யெச்சூரியை மூன்றாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
அதேவேளையில், கேரளத்தைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் ஒத்துழைப்புடன் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரை எம்.பி.யாக்குவதை ஏற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கட்சியின் தலைமைக் குழு விரைவில் முடிவெடுக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்கள் போராட்டத்தை அவமதிக்க வேண்டாம்: ராகுல் காந்தி காட்டம்

உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி! அபிஜீத் தீப்கே

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் வேலை; காலியிடங்கள்: 1213
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



