களைக் கொல்லியின் விற்பனைக்காக உருவாக்கப்பட்டதா கலப்பின கடுகு?

குளொபோசினேட் களைக் கொல்லியின் ஏகபோக உரிமம் கொண்ட ‘பேயர்ஸ்’ நிறுவனம், கலப்பின கடுகை உறுவாக்கிய ‘ப்ரோஅக்ரோ சீட்ஸ் லிமிட்டட்’ நிறுவனத்தின் கிளைகளுள் ஒன்று. விற்பனையை அதிகரிக்கவே கண்டுபிடிக்க பட்டது.

கடுகு சுயமாக மகரந்தம் செய்யக்கூடிய பயிர் வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு கடுகுப் பூவும் ஆண் கேசரம் மற்றும் பெண் யோனி ஆகிய இரண்டு விதைகளையும் கொண்டிருக்கும். அதுவே மரபணு மாற்றப்படும் கடுகு அதாவது இந்திய கடுகு யோனிகளை ஐரோப்பா கடுகு கேசரத்துடன் சேர்த்து கலப்பின வகையில் உருவாக்கப்படும் இந்தக் கடுகு சுய மகரந்த தன்மையை இழக்கும், அதனால் இந்திய நாட்டுக் கடுகு வகைகளான சுமார் 12,755 கடுகு வகைகள் அழிந்து போகும் வாய்ப்பு அதிகமுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் தாரா காய்கறி எண்ணெய் மற்றும் உணவு நிறுவனத்தால் பொதுவுடைமை ஆக்கப்பட்டு மலிவான விலைக்கு இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு கிடைப்பது இதன் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தாலும், இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு குளொபோசினேட் என்னும் ஒரு களைக் கொல்லியை சகித்துக்கொள்ளும் தன்மைவுடையது. குளொபோசினேட் கண்மூடித்தனமாகக் களைகளை அகற்றும், மரபணு மாற்றப்பட்ட சேடி வகைகள் மட்டுமே இதைத் தாங்கும் பலம் கொண்டிருக்கும். இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு குளொபோசினேடால் மட்டுமே அழியக் கூடிய களைகளை வளரச் செய்யும்.

2003-ல் இந்தியன் ஜெனிடிக் இஞ்சினியரிங் அப்ரூவல் கமீட்டீ இதற்கு வணிக ஒப்புதல் வழங்காமல் ஒத்திவைத்த நிலையில் இப்பொழுது ஒப்புதல் கொடுத்துள்ளது. 2003-ல் இதன் காப்புரிமையை பெற்றிருந்த ப்ரோஅக்ரோ நிறுவனமே இந்த கலப்பின கடுகு உருவாக முக்கிய காரணமும் ஆகும். குளொபோசினேட் களைக் கொல்லியின் ஏகபோக உரிமம் கொண்ட ‘பேயர்ஸ்’ நிறுவனம், ‘ப்ரோஅக்ரோ சீட்ஸ் லிமிட்டட்’ நிறுவனத்தின் கிளைகளுள் ஒன்று. ப்ரோஅக்ரோ இந்த கலப்பின கடுகை உருவாக்க முக்கிய காரணம் குளொபோசினேட் களைக் கொல்லியின் விற்பனையை அதிகரிக்கவும் ஆகும்.

20 முதல் 30 சதவீதம் உற்பத்தியை இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2002-ல்  இந்தியாவின் முதல் வணிகம் மற்றும் சாகுபடி செய்ய உரிமம் பெற்ற மரபணு மாற்றப்பட்ட உணவு அல்லாத ‘மான்சாடோ’ நிறுவனத்தின் பி.டி பருத்தி மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது, ஆனால் இந்தப் பருத்தியால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பே இன்றுவரை சரி செய்யப் படாத நிலையில் மரபணு மாற்றப்பட்ட கடுகின் சாகுபடிக்கு உரிமம் வழங்குவதைப் பலரும் எதிர்கிறார்கள். அவ்வாறு உரிமம் வழங்கப்பட்டால் இந்தியாவின் முதல் உண்ணக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர் கடுகு ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com