மக்காவ் ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா, காஷ்யப், பிரணீத்

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மக்காவ் ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா, காஷ்யப், பிரணீத்

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் சாய்னா
21-23, 21-14, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஹன்னா ரமாதினியை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் மற்றொரு இந்தோனேசிய வீராங்கனையான டினார் தியாவை சந்திக்கிறார் சாய்னா.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் காஷ்யப் 21-19, 21-8 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சன் வெய் செனனை வீழ்த்தினார். காஷ்யப் தனது 2-ஆவது சுற்றில் மற்றொரு சீன தைபே வீரரான லின் யூ ஷியெனை எதிர்கொள்கிறார்.
இந்தியாவின் சாய் பிரணீத்
21-12, 21-15 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் ஃபெய்ஸியாங்கை தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக ஹாங்காங்கின் வாங் விங்குடன் மோதுகிறார் சாய் பிரணீத்.
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 21-11, 17-21, 21-9 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் சான் ஆலன் யூன்-லீ குயென் ஹான் ஜோடியை தோற்கடித்தது. இந்திய ஜோடி தங்களின் 2-ஆவது சுற்றில் சிங்கப்பூரின் டேனி பாவா-ஹேந்த்ர விஜயா ஜோடியை எதிர்கொள்கிறது.

சிந்து விலகல்


மக்காவ் ஓபனில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினார்.
துபை சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் போட்டிக்கு தயாராவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மக்காவ் ஓபனின் நடப்பு சாம்பியனான சிந்து தனது முதல் சுற்றில் சீனாவின் யூ ஹன்னை சந்திப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீர் அதிர்ச்சித் தோல்வி


இந்தியாவின் சமீர் வர்மா தனது முதல் சுற்றில் 12-21, 15-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் முகமது பேயூ பங்கிஸ்துவிடம் தோல்வி கண்டார். கடந்த வாரம் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சமீர், மக்காவ் ஓபனிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com