
"உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள்' பட்டியலில் போர்ச்சுகலைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4-ஆவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவரும், பார்சிலோனா அணி வீரருமான லயோனல் மெஸ்ஸி, 2-ஆவது இடத்தைப் பிடித்தார். பிரான்ஸ் வீரர் ஆன்டோனி கிரிஸ்மான் 3-ஆவது இடத்தில் உள்ளார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரான்ஸ் கால்பந்து இதழ் வெளியிடவிருந்த நிலையில், திங்கள்கிழமை சில ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சி குறித்து ரொனால்டோ கூறுகையில், "ஒரு கனவு மீண்டும் நிஜமாகியுள்ளது. 4-ஆவது முறையாக இந்த விருதை பெற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது அணியின் சக வீரர்கள், ரியல் மாட்ரிட் அணி, இதர மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.