ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்தியாவும், ஸ்பெயினும் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆட, 22-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் கோலடித்தது.
இதனால் நெருக்கடிக்கு உள்ளான இந்திய அணி கடுமையாகப் போராடியபோதும், முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 57-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் சிம்ரன்ஜீத் சிங் கோலடிக்க, ஸ்கோரை சமன் செய்தது இந்தியா.
இதனால் உத்வேகம் பெற்ற இந்திய அணி 66-ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை ஹர்மான்பிரீத் அடித்தார். இதுவே வெற்றிக் கோலாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர் அபாரமாக ஆடியபோதும், தங்களுக்கு கிடைத்த 9 பெனால்டி வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே கோலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 2005-இல் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்திய அணி. வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா.
பெல்ஜியம் தனது காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவையும், ஜெர்மனி தனது காலிறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com