சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சமீர் வர்மா 11 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சமீர் வர்மா, இப்போது தரவரிசையிலும் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் அஜய் ஜெயராம் அதிகபட்சமாக 19-ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக எச்.எஸ்.பிரணாய்
21-ஆவது இடத்தில் இருக்கிறார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் ஓர் இடத்தை இழந்து 10-ஆவது இடத்தில் உள்ளார். பி.வி.சிந்து தொடர்ந்து 5-ஆவது இடத்தில் இருக்கிறார்.
கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 13-ஆவது இடத்திலும், ஆடவர் இரட்டையர் தரவரிசையில்
இந்தியாவின் மானு அத்ரி-
சுமீத் ரெட்டி ஜோடி 23-ஆவது இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்; வெற்றி தொடருமா?

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை

தண்ணீர் தொட்டியில் சிக்கிய குழந்தைகள்! ஹெலிகாப்டர் மூலம் மீட்பு! | Uttarpradesh
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

