ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Published On :

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்குப் பதிலாக பர்வீஸ் ரசூல், அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சீனியர் தேர்வுக் குழுவும், இந்திய அணி நிர்வாகமும் கலந்தாலோசித்த பிறகு சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிப்பது என முடிவெடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 26-ஆம் தேதி கான்பூரிலும், 2-ஆவது ஆட்டம் 29-ஆம் தேதி நாகபுரியிலும், 3-ஆவது ஆட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெறுகின்றன.
அணி விவரம்: கே.எல்.ராகுல், மன்தீப் சிங், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, பர்வீஸ் ரசூல், யுவேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.