2-ஆவது டெஸ்ட்: நியூஸி. 268-க்கு ஆல்அவுட்

2-ஆவது டெஸ்ட்: நியூஸி. 268-க்கு ஆல்அவுட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Published on

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் ஹென்றி நிகோலஸ் 161 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் குவித்தார். ஆனால் எஞ்சிய வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் அந்த அணி 79.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜே.பி.டுமினி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தென் ஆப்பிரிக்கா-24/2: பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. காகிசோ ரபாடா 8 ரன்களுடனும், ஆம்லா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். முன்னதாக ஸ்டீபன் குக் 3, டீன் எல்கர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com