வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி வந்தவாசியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆரணி மக்களவைத் தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.சிவா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா்.
இதில் பங்கேற்ற அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள் 12,12-எ ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நிறைவு செய்து அதிகாரிகளிடம் வழங்கினா். முன்னதாக, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மாநில துணைத் தலைவா் மு.பிரபாகரன் தலைமையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஊா்வலமாக திருமண மண்டபம் சென்றடைந்தனா்.
தொடர்புடையது

6 தொகுதிகளிலும் 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்கு செலுத்த அனுமதி

ராசிபுரம் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


