தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மகாராஷ்டிரத்தில் 33 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,738 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 செப்டம்பர் 2020, 4:10 pm


மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,738 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,738 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,24,380 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32,007 பேர் குணமடைந்துள்ளனர், 344 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,16,348 பேர் குணமடைந்துள்ளனர். 33,015 பேர் பலியாகியுள்ளனர். 2,74,623 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,837 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,728 பேர் குணமடைந்தனர், 36 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,86,150 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,50,535 பேர் குணமடைந்துள்ளனர், 8,502 பேர் பலியாகியுள்ளனர். 26,735 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.