மனிதனின் ஜனனம் தொடங்கி
மரணம்வரை தொடர்ந்தே வந்து
பின்னிப் பிணைந்தே பயணம் -
பட்டாசின் பொருமல் சத்தம்!
இருமனம் இணையும் திருமண
வரவேற்பில் வண்ணப் பூச்சொரியும்;
புது வாரிசு வரும் தருணத்திலும்
விதவிதமாய் மத்தாப்பு பூக்கும்!
கோவில் திருவிழா உற்சவர் உலாவில்
'அதிர்வேட்டாய்' காதைப் பிளக்கும்;
தேர்தல் திருவிழா வேட்பாளர் வருகையில்
'தௌஸன்வாலா'வாய் வெடிக்கும்..
மன்மத அம்புகள் தைத்த மனங்கள்
பட்டாம்பூச்சியாய் பறக்கும் நேரம்..
இனம்புரியா காதல் மயக்கத்தில்
எவரெஸ்ட்டுக்கே 'ராக்கெட்' பயணம்!
எல்லாம் முடிந்து ஆடியடங்கி
எமனின் அழைப்பை ஏற்கும் வேளை..
பல்லக்கின் 'சொகுசுப் பயண'த்திலும்
பட்டாசு சத்தம் பெரிசாய் கேட்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

