ஜன்னல் நிலா: ஆர்.அருண்குமார்.

Updated on
1 min read
வானில் நீந்தும் நிலாபோலவாழ்வில் மதிமுகம் காட்டுவாய்மீனாக விழிகள் துள்ளியேமின்னலாக வந்து செல்வாய்.இரவில்தான் ஒளியென்பதை மாற்றிஇதயத்தில் சுகம் தரும் பதுமையே.உறவுகள் ஆயிரம் இருந்தாலும்உள்ளத்தில் ஊஞ்சலாடுகிறாய்.கள்ளம் கபடமற்ற நிலவாகிகனவுகளுக்கு முற்றுப்புள்ளியானாய்.ஜன்னல் கம்பிகளில் துருபிடித்தும்சலனமேயில்லாத ஒளிமுகமாவாய்.காலம்காலமாய் கதைகள் சொல்லும்கல்வெட்டாகியதும் ஜன்னலே.நாளத்தில் புகுந்து நலம்தரும்நல்மனவே கவலை வேண்டாம்.வரதட்சிணை அரக்கன்களைவதைத்ததும் இந்த ஜன்னல் நிலவே.வருவார்கள் நிறைய நல்லவர்கள்வாழ்வு தருவார்கள் இனிமேல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com