ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்:  கு.முருகேசன்

Updated On :11 ஜூன் 2018, 10:31 am
சிந்தனையில் பிறந்துமற்றவரை சிகரத்தில் ஏற்றும்எல்லாச் சொல்லும்வெல்லும் சொல்லே!தலையில் பிறந்துவாயில் தவழ்ந்து- அடுத்தவர் மனதைத் தொடும் மந்திரச் சொல்யாவும்வெல்லும் சொல்லே!உடைந்த இதயத்திற்குமயிலிறகால் மருந்துபோடும்அன்பான சொல் அனைத்தும்வெல்லும் சொல்லே!வாழ்வில் துவண்டு விழும்போதுதூக்கி நிறுத்தும்ஊக்கச் சொல் அனைத்தும்வெல்லும் சொல்லே!அறியாப் பருவம் தொட்டுஆற்றுப்படுத்தும் அப்பாவின்அறிவுரை சொற்கள் எல்லாம்வெல்லும் சொல்லே!தவறுகளைச்  சுட்டிதொண்டர்களை தட்டிதலைவன் சொல்லும் எச்சொல்லும்   வெல்லும் சொல்லே!ஏக்கத்தை போக்கிஊக்கத்தை தூக்கித் தரும்அன்புச் சொல் அனைத்தும்வெல்லும் சொல்லே!அடுத்தவர் இதயத்தில்சிம்மாசனம் போட்டு அமரும்நல்லவர் சொல் என்றும்வெல்லும் சொல்லே!தாழ்ந்து கிடக்கும் சமூகத்தைதலைநிமிரச் செய்யும்சத்தான சொல் யாவும்வெல்லும் சொல்லே!சிதைந்த மனதை சீராட்டும் சொல்லும்!சிப்பாயியை சீறியெழச் செய்யும் சொல்லும்!சிந்தனையைத் தூண்டும் சிறிய சொல்லும்வெல்லும் சொல்லே!பொய்சாட்சி சொல்லும் சொல்லைமனசாட்சியே கொல்லும்!உண்மையைச் சொல்லும் எச்சொல்லும்வெல்லும் சொல்லே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.