தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நிதானம்!

சாகேதர் என்னும் ரிஷி தற்காப்புக் கலை, யோகம், தியானம் முதலியவைகளில் வல்லவர்.

News image
Updated On :30 மார்ச் 2018, 6:30 pm

சாகேதர் என்னும் ரிஷி தற்காப்புக் கலை, யோகம், தியானம் முதலியவைகளில் வல்லவர். சிலருக்கு அவைகளில் பயிற்சியும் அளித்து வந்தார். சீடர்களுடன் அவர் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தார். அந்த ஆசிரமம் ஒரு நதியின் ஓரம் இருந்தது. 
அமரேந்திரபுரத்திலிருந்த சித்தார்த்தனுக்கு தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள ஆவலாய் இருந்தது. ஆனால் சித்தார்த்துக்கு எதிலும் பதட்டம்....அவசரம் இருந்தது. சாகேதர் பற்றிக் கேள்வியுற்றான். தன் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்ட அவன் சாகேத ரிஷி இருக்கும் ஆசிரமத்திற்கு விரைந்தான். அவர் வசிக்கும் ஆசிரமத்தையும் அடைந்தான். 
சித்தார்த்தன் சாகேதரிடம், ""குருவே, எனக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கிறது...நான் இப்போதே உங்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.....எப்போது பாடத்தை ஆரம்பிக்கலாம்? ....எத்தனை வருடங்கள் ஆகும் அதைக் கற்றுக்கொள்ள?...'' என்று சரமாரியாகக் கேட்டான். 
சாகேதர் அவனிடம் சிரித்துக் கொண்டே, ""ம்......சரி,.....இப்போதே பாடத்தை ஆரம்பித்தால் சுமார் ஆறு வருடத்தில் கற்றுக் கொள்ளலாம்!'' என்றார்!
""ஐயய்யோ!.....அவ்வளவு வருடம் ஆகுமா?.... நான் விரைவாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்....தினமும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நான் பயிற்சி செய்கிறேன்.....ஐந்தாறு மடங்குகூட பயிற்சி செய்யத் தயார்!.....அப்படிச் செய்தால் நான் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் ஆகும்?'' என்றான் பதட்டத்துடன்!
குரு அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, ""பன்னிரண்டு வருடங்கள் ஆகும்!'' என்றார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.