பிரான்சை சேர்ந்த "ஸ்டார்ட் அப்' நிறுவனத்தைச் சேர்ந்த துணை நிறுவனத்தின் பெயர் "வெல்லோ பேமிலி நிறுவனம்' !
இந்த வெல்லோ நிறுவனம் நகர்ப்புற வாகன நெரிசலுக்கு ஒரு தீர்வு கண்டுள்ளது! (கரோனாவை விடவான்னு கேட்காதீங்க!...) இது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சூரிய ஆற்றலில் ஓடும் வாகனத்தை உருவாக்கியுள்ளது. இது பாதி மோட்டார் சைக்கிளைப் போலவும், பாதி காரைப்போலவும் உள்ளது. ஆனால் இது காரைப்போல இடத்தை அடைத்துக் கொள்ளாது! ஒரு மோட்டார் சைக்கிளை வைக்கும் இடம் இதற்குப் போதுமானது!
அது மட்டுமில்லீங்க!.... நெரிசல் அதிகமா இருக்கும் சாலைகளிலும் இதில் விரைந்து செல்லலாமாம்!... (அதெல்லாம் சரி,.... மைலேஜ் என்ன கொடுக்கும்னுதானே கேட்கறீங்க?)
பெட்ரோல் எல்லாம் வேண்டாங்க... இதை இப்போ செல்லமா "பைக் கார்' னு கூப்பிடுவோம்!.... இந்தக் பைக் கார் சூரிய சக்தியிலேயே ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரொம்பப் பேருக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்! ஏன்னா பெட்ரோல் டீசல் உபயோகத்தாலே காற்றிலே மாசு எக்கச்சக்கமா கலக்கிற காலம் இது!.... இந்த பைக் காரை ரொம்ப வரப்பிரசாதமா நினைக்கிறாங்க. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாம வாகனங்களைத் தயாரிக்கிறதிலே இப்போ உலகம் முழுக்க ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க.
லாஸ்வேகாஸ்லே ஒரு பொருட்காட்சி நடந்தது! அதிலே இந்த பைக் காரை காட்சிக்கு வெச்சிருந்தாங்க! கொள்ளை அழகோட இதன் வடிவமைப்பைப் பார்த்து ஜனங்கள் ரொம்பவே அசந்து போயிட்டாங்க! பொருட்காட்சிக்கு விஜயம் செய்த அத்தனை பேரையும் இது கவர்ந்து விட்டதாம்!
அதெல்லாம் சரி. பேட்டரி தீர்ந்து போய்விட்டால் இந்தக் கார் வேலை செய்யுமான்னு சிலர் கேட்கிறாங்க... அதுக்கும் ஒரு வழியிருக்கு! சும்மா அசால்டா சைக்கிளில் பெடலை மிதிச்சுக்கிட்டுப் போறா மாதிரி இந்தக் காரை ஓட்டிக்கிட்டுப் போகலாமாம்!
இனிமே கொஞ்சம் சுருக்கமா இந்தக் பைக் காரைப் பற்றி தெரிஞ்சுக்குவோம்! இந்தக் காரின் மேற்கூரையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் சேமிக்கும் வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி வீக்காக இருக்கும்போது பைக் கார் மெதுவாகப் போவது போல் தோன்றினால் பெடலை மிதித்து வேகத்தை அதிகரிக்க முடியுமாம்! முழுவதும் மூடப்பட்டிருப்பதால் மழை வெயிலில் பாதிப்பு ஏற்படாம் பயணம் செய்யலாம்! எனவே இது மோட்டார் சைக்கிளை விட மேம்பட்டது. மூன்று சக்கரங்கள் கொண்டது! சாலையில் ஸ்திரமாக நிற்பதால் மோட்டார் சைக்கிளைப் போல் காலை ஊன்ற வேண்டியதில்லை!
அதுமட்டுமில்லீங்க!.... இந்த பைக் காரில் மூன்று பேர் பயணம் செய்யலாம்! நீளம் 7.4 அடியும், அகலம் 2.7 அடியும் கொண்ட அழகிய வாகனம் இது! ப்ளூடூத் வசதியும் இருக்கிறது.
(எல்லாம் ஓ.கே!.... எவ்வளவு ஸ்பீட் போகும்?)
மணிக்கு சுமார் 40 கி.மீ. வேகத்தில் இந்த பைக் கார் போகும். ஒரு முறை பாட்டரி முழுதாக சார்ஜ் ஆகிவிட்டால் ல் 100 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
பிரான்சில் இதற்கு லைசென்ஸ் தேவையில்லையாம்! இந்கக் கார் இந்தியாவுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்னு சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாள்லே இந்த வாகனம் இந்திய சாலைகளில் வலம் வரும்னு பேசிக்கிறாங்க.
தொகுப்பு :
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


