காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் இளையனார் வேலூர் என்ற கிராமத்தில் சேயாற்றின் வடகரையில் சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தூரத்திலும், வாலாஜாபாத்திலிருந்து 9 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
ஆலயத்தின் அமைப்பு:
இளையனார் வேலூரில் முருகப் பெருமான் தனிச் சந்நிதி கொண்டு தேவியர்கள் இன்றி தனி முருகப்பெருமானாக (பிரம்ம சாஸ்தா கோலத்தில்) அருள்கின்றார். வேறு எந்த முருகன் கோயிலிலும் வேலுக்கென்று தனிச் சந்நிதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் கருங்கல்லில் வேலானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த வேல் சந்நிதிக்கும் இரண்டு கால பூஜைகள் சிறப்புற நடைபெறுகின்றன. இக்கோயில் திருக்குளம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது.
கஜவள்ளி சந்நிதி :
கஜவள்ளி சந்நிதி தனியாக உள்ளது. பாதி வள்ளியும், பாதி தெய்வானையும் ஒருங்கே அமைந்ததுதான் கஜவள்ளி.
சிவன் சந்நிதி :
திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீபெருந்தண்ட உடையார் சிவன் சந்நிதி உள்ளது. அடுத்து ஏகாம்பரநாதர் மற்றும் அண்ணாமலையார் சந்நிதிகளும் உள்ளன.
டம்பரநாதர் சந்நிதி :
இளையனார் வேலூர் திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் ஒரு சிவலிங்க மூர்த்தியாக கடம்பரநாதர் எழுந்தருளியிருக்கிறார். முருகப்பெருமான் நாள்தோறும் கடம்பரநாதரை வழிபட்டுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது கடம்பரநாதர் புராணம்.
தல வரலாறு :
காசிப முனிவர், சேயாற்றங்கரையில் தங்கி உலக நலன் கருதி வேள்வி செய்யத் தொடங்கினார். அவ்வேள்வியை மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தடுத்து இடையூறு விளைவித்தனர். இவ்விரு அசுரர்களும் மாகறல் ஈஸ்வரனிடம் அழியாத வரம் பெற்றவர்களாவர்.
காசிப முனிவர் கடம்பரநாதரையும் அம்பிகை ஆவுடை நாயகியையும் வணங்கி, வேள்விக்கு மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தொல்லை கொடுப்பதைச் சொல்லி முறையிட்டார். இறைவனும் இறைவியும் காட்சியளித்து முருகக் கடவுளை அழைத்து வேலாயுதம் தந்து வேள்விக்கு ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கிடக் கட்டளையிட்டனர். முருகப்பெருமானும் அந்த மலையன், மாகறனை வதம் செய்து வேள்வியை நல்ல முறையில் நடத்த உதவினார். அந்த வேலை முருகப்பெருமான் இளையனார் வேலூரில் நாட்டினார்.
அருணகிரிநாதர் திருப்புகழில் இரு பாடல்களைப் பெற்ற தலம். அதில் அவர் வேலூர் என்றே குறிப்பிட்டுள்ளார். இரண்டு பாடல்களும் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் சுவாமிநாத சித்தர் என்ற சித்தரின் தனி சந்நிதி உள்ளது. இச்சித்தர் திருவாவடுதுறை ஆதின முனிபங்கர் ஈசான தேசிகர் ஆவார். இவர் திருநெல்வேலி ஆதின மடாலயத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர். இவரது இயற்பெயர் சுவாமி நாததேசிகர் என்பதாகும். வடமொழியையும், தமிழ் மொழியையும் முறையாகப் பயின்றவர். இளையனார் வேலூர் தல வரலாறு இவரால் பாடப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் கிருத்திகை, தேய்பிறை, வளர்பிறை, சஷ்டி, விசாகம், சித்திரை மாத பிரம்மோற்சவம், வைகாசி வசந்தோற்சவம், வைகாசி விசாகத்தில் 1008 சங்காபிஷேகம், ஆடிக் கிருத்திகை, ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசியில் கஜவல்லிக்கு நவராத்திரி பூஜை, ஐப்பசியில் கந்த சஷ்டி 6 நாட்கள் நடைபெறும். சூர சம்ஹாரம் கிடையாது. மலையன்-மாகறன் சம்ஹாரம், வளர்பிறை பிரதோஷம் மக நட்சத்திரத்தில் நடைபெறும்.
பேருந்துகள்: காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக அரசுப் பேருந்து ப86 மற்றும் தனியார் பேருந்தும், காஞ்சிபுரத்திலிருந்து மாகறல் வழியாக ப34
பேருந்தும் செல்கின்றன.
தொடர்புக்கு : வேதகிரி குருக்கள் : 97896 35869 செங்குட்டுவன் : 9442092276
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் இளையனார் வேலூர் என்ற கிராமத்தில் சேயாற்றின் வடகரையில் சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


