பஞ்சாங்கம்

வியாழக்கிழமை

18

ஹேவிளம்பி வருடம், தை 5-ம் தேதி

நல்ல நேரம்

காலை 10.30 - 11.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

1.30 - 3.00

எம கண்டம்

6.00 - 7.30

குளிகை

9.00 - 10.30

திதி

பிரதமை

நட்சத்திரம்

திருவோணம்

சந்திராஷ்டமம்

புனர்பூசம், பூசம்

இன்றைய ராசிபலன்

மேஷம் - செலவு
ரிஷபம் - பெருமை
மிதுனம் - ஓய்வு
கடகம் - சினம்
சிம்மம் - புகழ்
கன்னி - ஆர்வம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - லாபம்
தனுசு - தொல்லை
மகரம் - சிரமம்
கும்பம் - அச்சம்
மீனம் - அசதி

யோகம்:  அமிர்த / சித்த யோகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

விசேஷம்: சந்திர தரிசணம். திருவோண விரதம். திருமொச்சியூர் ஸ்ரீ சிவபெருமான் பவனி வருதல்.

கேள்வி - பதில்
 • எனது மகனுக்கு சர்ப்ப தோஷம் உள்ளதா? வேறு ஏதேனும் தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்? சொந்தத்தில் பெண் அமையுமா?
  - வாசகர், வேலூர்

 • உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று பூர்வபுண்ணியாதிபதியுடன்இருப்பதால் புத ஆதித்ய யோகம் பெற்று சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப் படுகிறார்கள். அதோடு சிவராஜ யோகமும் கஜகேசரி யோகமும் உண்டாகிறது. தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசை நடக்கிறது. லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியான சனிபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். அந்நியத்திலிருந்து பெண் அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. 

 • என் அண்ணன் மகனின் ஜாதகப் பலன்கள் எவ்வாறு உள்ளது?
  - பாலகிருஷ்ணன், ஆவடி

 • உங்கள் அண்ணன் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம், லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் கைகூடும். உங்கள் சகோதரரின் மகனுக்கு தனுசு லக்னம், மீன ராசி. தற்சமயம் ஆறு மற்றும் 11 ஆம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு இறுதி வரையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கும். களத்திர ஸ்தானாதிபதி சுப பலத்துடன் அமர்ந்து குருபகவானுக்கு கேந்திர ஸ்தானத்திலும் அந்த வீட்டிற்கு அதிபதியான சனிபகவானுக்கு திரிகோண ராசியிலும் அமர்ந்திருப்பதால் மணவாழ்க்கை சீராகவே அமையும். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு 18 வயதாகிறது. கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் போய்வர வேண்டும் என்கிறார். அவருக்கு வாகனம் ஓட்டினால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர் கூறுகிறார். வாகன யோகம் உள்ளதா? இதற்கு ஏதும் பரிகாரம் உள்ளதா?
  - வாசகி, கோயம்புத்தூர் 

 • உங்கள் மகனுக்கு கும்ப லக்னம் அல்ல. மீன லக்னம். அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. லக்னாதிபதியான குருபகவான் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். வாகன காரகரான சுக்கிரபகவான், சூரியபகவானுடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் ஆறாம் வீட்டில் பலம் பெற்ற ராகுபகவான்அமர்ந்து தசையை நடத்துகிறார். அதனால் வாகனம் ஓட்டினால் பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. மேலாண்மை துறையில் மேற்படிப்பை படிக்க வைக்கலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

 • வயிற்றுவலியால் அவதிபடும் என் மகனின் நோய் எப்போது சரியாகும்? வேலை வாய்ப்பு எப்போது கிடைக்கும்? 
  - வாசகர், தேவகோட்டை

 • உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்க, அவர்களை குருபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் உச்சம் பெற்ற லக்ன சுகாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. புதபகவானை பாக்கியாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார். அதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வயிறு சம்பந்தமான உபாதைகள் தற்காலிகமானது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு முழுமையாக தீர்ந்துவிடும். இந்த காலகட்டத்தில் படிப்புக்கு ஏற்ற உத்தியோகமும் அமைந்து விடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்திசையில் வரன் அமையும்? 
  - வாசகர், மோட்ச குளம்

 • உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் ஸ்தானத்திற்கு மறைவு பெற்றிருந்தாலும் குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு. அவருக்கு புதஆதித்ய யோகம், சிவராஜயோகம், கஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம், ருசக யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. சுக லாபாதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் குடும்பாதிபதி தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றும் இருப்பதால் மணவாழ்க்கை ,
  எதிர்காலம் வளமாக அமையும். இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும்.

 • எனது பேரன் கல்லூரி செல்வதில்லை. வீட்டை விட்டும் வெளியே போவதில்லை. அவனது இந்த நிலை எப்போது சரியாகும்? 
  - வாசகி, ஈரோடு

 • உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. கல்வி ஸ்தானாதிபதி மறைவு பெற்றாலும் அது மிதுன லக்னத்திற்கு நலமே செய்வார். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவரின் மனதில் தெளிவு ஏற்பட்டு மறுபடியும் கல்வியைத் தொடர்வார். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • கட்டடக்கலை வல்லுநராக வேலை பார்த்துவந்த என் கணவருக்கு கடந்த ஒன்றரை வருடமாக வேலை இல்லை. அதன் பிறகு சில நிறுவனங்களில் முயற்சி செய்தும் தகுந்த வேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? அரசு வேலை அமையுமா? சொந்தத் தொழில் செய்யும் வாய்ப்புண்டா? 
  - வாசகி, சிவகாசி

 • உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் வலுவாக இருக்கிறார்கள். அவருக்கு இந்த ஆண்டு (2018) மார்ச் மாதத்திற்குள் சிறப்பான வேலை கிடைத்துவிடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். சொந்தத் தொழில் வேண்டாம். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • பி.இ., படித்துள்ள என் மூத்த மகனுக்கு நிரந்தர வேலை இன்னும் கிடைக்கவில்லை. அரசு வேலை கிடைக்குமா? அல்லது வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? பி.இ., படித்துக் கொண்டிருக்கும் என் இரண்டாவது மகனுக்கு வேலை, எதிர்காலம் எப்படி இருக்கும்?
  - தரணி, அரும்பாக்கம்

 • உங்கள் மூத்த மகனுக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் அமையும். லக்னாதிபதி, குடும்பாதிபதி, களத்திர தொழில் ஸ்தானாதிபதி ஆகியோர் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. புத ஆதித்ய யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளதால் உத்தியோகத்தில் நல்ல நிலையை எட்டி விடுவார். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் இரண்டாம் மகனுக்கு பாக்கிய ஸ்தானமும் லாப ஸ்தானமும் வலுவாக உள்ளன. அவரை மேலாண்மைத் துறையில் மேற்படிப்பை படிக்க வைக்கவும். தனியார் துறையில் சிறப்பான உத்தியோகம் கிடைக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

 • என் மகளுக்கு ஐந்து மாதங்கள் ஆகியும் மஞ்சள் காமாலை இன்னும் குணமாகவில்லை. எப்போது குணமாகும்? திருமணம் எப்போது கைகூடும்? 
  - கோமதி, தூத்துக்குடி

 • உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கப்படுவதால் பெரிய ஆரோக்கிய குறைபாடு என்று எதுவும் ஏற்படாது. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு (2018) ஜூன் மாதத்திற்குள் தேக ஆரோக்கியம் சீரடைந்து விடும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

 • எனக்கு ஐந்து மகள்கள். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மருத்துவராகப் பணிபுரியும் என்மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
  - ராமராஜன், விழுப்புரம்

 • உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், லக்னாதிபதி ஆட்சி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி உச்சம். மேலும் ஆட்சி பெற்ற லக்னாதிபதியை குருபகவான் பார்வை செய்வது சிறப்பு. புத ஆதித்ய யோகம், குருசந்திர யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தர்மகர்மாதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தை பார்வை செய்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
  - சுப்ரமணியம், பாடிகுப்பம்

 • உங்களுக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி. களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகத்துடன் லக்னத்தில் இணைந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அயன ஸ்தானத்திலும் லக்ன அசுபர்கள் இணைந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன்அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிவமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனக்கு திருமண பாக்கியம் உள்ளதா? 
  - பாலசுப்ரமணியன், சென்னை

 • உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருக்கிறார். மற்றபடி புத்திர ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவான் நீச்சம் பெற்று பாக்கியாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கர்ம ஸ்தானமும் சுப கிரகங்களால் சூழப்பட்டுள்ளது. உங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.

 • 35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?
  - சந்திரசேகரன், குமாரபாளையம்

 • உங்கள் மகனுக்கு மகர லக்னம். களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அஷ்டம ஸ்தானத்தில் லக்னாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. தற்சமயம் குருபகவானின் தசையில் சனிபுக்தி நடக்க இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி திங்கள் கிழமைகளில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட்டு வரவும்.

 • பி.இ., படித்துள்ள என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? அரசு வங்கியில் வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? பரிகாரம் செய்ய வேண்டுமா?
  - வெங்கடேஷ், உடுமலை

 • உங்கள் மகனுக்கு மீன லக்னம், கடக ராசி. தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள சுக களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அவருக்கு அரசு அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கும். வேலையில் படிப்படியாக நல்ல நிலையை எட்டி விடுவார். வெளிநாடு சென்று வரும் யோகமும் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு வயது 33. பி.இ., படித்து நல்ல நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஜோதிடர் காலசர்ப்ப தோஷம் இருப்பதாக சொல்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் பெண் அமையும்?
  - ஆதிமூலம், செங்கோட்டை

 • உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலா ராசி. களத்திர ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகத்தை அடைகிறார். களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் சிறப்பான பலம் பெற்றிருக்கிறார். பாக்கிய ஸ்தானமும் வலுவாக இருப்பது சிறப்பு.அவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். மற்றபடி வலுவான ஜாதகமாகும்.

 • என் சகோதரருக்கு 40 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்பொழுது நடக்கும்? எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும்? குழந்தை பாக்கியம் உண்டா? ஏழாம் வீடும் எட்டாம் வீடும் காலியாக இருக்க வேண்டுமா? அவருக்கு யோக ஜாதகமா அல்லது தோஷ ஜாதகமா? காலசர்ப்ப யோகம் உள்ளதா? எங்களுக்கு பெற்றோர் உள்ளதால் ஆயில்யம், மூலம் நட்சத்திரப் பெண்களைத் தவிர்க்க வேண்டுமா? திருமண வாழ்க்கைக்கு நவாம்சத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். அவருக்கு நவாம்சம் எவ்வாறு உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகி, திருவள்ளூர்

 • உங்கள் சகோதருக்கு கடக லக்னம், பூச நட்சத்திரம், கடக ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
   ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சுயசாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
   ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
   தனம் வாக்கு குடும்ப ஸ்தானாதிபதியான சூரியபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
   மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
   ஏழாம் வீடான களத்திர, நட்பு ஸ்தானத்திற்கும் எட்டாம் வீடான அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
   ராகுபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
   கேதுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
   நவ (ஒன்பது) அம்சம் (பாகம்) அதாவது ஒரு ராசியை முப்பது பாகையை ஒன்பதாக பிரித்துப் பார்த்து அமைக்கப்படுவதே நவாம்ச கட்டமாகும். சர ராசிகளுக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) முதல் ராசியிலிருந்தும் ஸ்திர ராசிகளுக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) ஒன்பதாம் ராசியிலிருந்தும் உபய ராசிகளுக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) ஐந்தாம் ராசிகளிலிருந்தும் கணக்கிட வேண்டும்.
   உதாரணமாக அவருக்கு லக்னம் ஆயில்யம் 2 இல் உள்ளது. ஆயில்யம் இரண்டு என்பது 7 ஆவது அம்சமாகும். அதனால் கடக ராசியாக ஆவதால் அதை முதல் ராசியாகக் கொண்டு ஏழு ராசிகளை எண்ணிக் கொண்டு வந்தால் நவாம்ச லக்னம் மகரமாக வருகிறது.
   ஒருவர் அம்சமாக இருக்கிறார் அல்லது ஒரு விஷயம் அம்சமாக நடந்து முடிந்தது என்பதை நவாம்சத்தைக் கொண்டு கூறினார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
   பல அம்சங்கள் இருந்தாலும் நவாம்சத்தை திருமண வாழ்க்கையை பற்றி குறிப்பாக தெரிந்து கொள்வதற்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவருக்கு சனிபகவான் ஏழாமதிபதியாகி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இது நவாம்ச லக்னமாகும்.
   அதாவது நவாம்ச லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவானுக்கு ராசியிலும் நவாம்சத்திலும் சம்பந்தம் ஏற்படுகிறது. எந்த பாவாதிபதியும் அந்த பாவத்தைப் பார்வை செய்வது சிறப்பாகும். அதனால் அவருக்குத் திருமணம் உண்டு என்று உறுதியாகக் கூறலாம்.
   ஐந்தாமிடம் மந்திர ஸ்தானம் ஆவதால் மந்திர சித்தியும் ஏற்படும். புத்திர ஸ்தானமாவதால் சத்சந்தானம் (குழந்தை) கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் கொடுக்கும் வீடாகும். பெரியோர்களின் நல்லாசிகளைப் பெற முடியும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் சந்ததி விருத்தி அடையும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். அதேநேரம் சர லக்னங்களுக்குப் பதினொன்றாமிடம் பாதக ஸ்தானமும் ஆகிறது.
   பத்தாமதிபதி பதினொன்றாம் வீட்டில் இருப்பது சிறு குறை என்றாலும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நலமே புரிவார். கடக லக்னத்திற்கு செவ்வாய்பகவான் ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் ஒரு கேந்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் ராஜயோக காரகர் என்று அழைக்கப் படுகிறார். அதனால் புத்திர பாக்கியம் உறுதியாக உண்டு என்று கூற முடிகிறது.
   லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதை சாமர யோகம் என்பார்கள். அதுவும் இந்த யோகம் சந்திரபகவானுக்கு உண்டாவதால் வளர்பிறை சந்திரனைப் போல் நாளுக்கு நாள் வளர்ச்சி ஏற்படும். சமுதாயத்தில் புகழும் உன்னத ஸ்தானமும் கிடைக்கும். தனம் வாக்கு குடும்பாதிபதியான சூரியபகவான் லக்னத்தில் இருப்பதும் சிறப்பு.
   களத்திர ஸ்தானாதிபதியும் சூரியபகவானும் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகங்களாக ஆவதால் இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். முன்னால் ராகுபகவானும் பின்னால் கேதுபகவானும் இருப்பதால் அனுலோம காலசர்ப்ப யோகமாகும். இதனால் அவரின் வாழ்க்கையில் முப்பதிரண்டு வயதிற்கு மேல் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூற வேண்டும்.
   களத்திரகாரகரான சுக்கிரபகவான் அயன ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்திருப்பது குறை. குருபகவான் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகி விபரீத ராஜயோகம் பெற்று இருப்பதாலும் சுக்கிரபகவான் நவாம்சத்தில் பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியாகி உச்சம் பெறுவதால் இந்த இணைவால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
   தற்சமயம் கேது மஹா தசை முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி மூலம், ஆயில்யம் நட்சத்திரங்கள் உள்ள பெண்ணை ஒதுக்க வேண்டாம்.
   ஏழாம் வீடும் எட்டாம் வீடும் காலியாக தான் இருக்க வேண்டியது அவசியமில்லை. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
   
   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை