'நீர்நிலைகள் தூர்வாரல் மூலம் விவசாயிகளுக்கு 1.47 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் அளிப்பு'

விவசாயிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
'நீர்நிலைகள் தூர்வாரல் மூலம் விவசாயிகளுக்கு 1.47 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் அளிப்பு'

விவசாயிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம் தொடர்பாக, சட்டப் பேரவையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெள்ளிக்கிழமை கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
துரை சந்திரசேகர் (திமுக): தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரண நிதி முழுமையாகச் சென்றடையவில்லை. இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,625 அளிக்கப்பட்டாலும் அது கூட்டுக் குடும்பமாக வசிப்போருக்குக் கிடைப்பதில்லை.
திருவையாறு, பூதலூர், தஞ்சை வட்டங்களில் நிவாரண நிதி விடுபட்டுள்ளது. திருவாரூரில் உள்ள 27 பிர்க்காக்களில் பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுப் பணம் சென்றடையவில்லை. பம்ப் செட்டுகள் மூலம் விவசாயம் செய்வோருக்கு சிறப்பு குறுவைத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
கே.ஆர். ராமசாமி (காங்கிரஸ்): வறட்சியால் பாதித்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. காப்பீடு செய்திருந்தாலும் இழப்பீடு முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலை உள்ளது. உரிய இழப்பீடுகளை மத்திய அரசுடன் இணைந்து பெற்றுத் தர வேண்டும்.
வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்: உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிற பருவநிலை மாற்றங்களின் காரணமாக இயற்கை நம்மை வஞ்சித்து வருகிறது. இதுபோன்ற மிகக் கடுமையான நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தகைய கடுமையான நிலைகள் வந்தாலும் விவசாயிகளுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வறட்சிக்காக நிவாரணம் அளித்த ஒரே மாநிலம் தமிழகம்தான்.
தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர் அளவை உயர்த்தவும் நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் படிவுகளை எடுத்து, அதை விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 29 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 467 நீர் நிலைகளில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 310 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 522 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com