சிறந்த கன்னடநூல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கன்னடபுத்தக ஆணையம் வழங்கும் சிறந்த கன்னடநூல் விருதுக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று கன்னட புத்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

கன்னடபுத்தக ஆணையம் வழங்கும் சிறந்த கன்னடநூல் விருதுக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று கன்னட புத்தக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 2017-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் வெளியிடப்பட்ட  கன்னட நூல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து சிறந்த கன்னட நூல் விருது-2017 வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
நூல்களின் உள்ளடக்கம்,  அச்சுத்திறன்,  முகப்பு வரைகலை, கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கன்னடப் பதிப்பாளர்களுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. 
முதல் பதிப்பு முதல்  ஐந்தாம் பதிப்பு வரையும்,  குழந்தை நூல்களுக்கு விருது வழங்கப்படும். விருப்பமானவர்களிடம் இருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நூலின் பெயர், எழுத்தாளர் பெயர், பதிப்புஆண்டு, பதிப்பாளர் பெயர், முகப்பு வரைகலையாளர் பெயர், முகவரிபோன்றவிவரங்களுடன் 2 நூல்களை இணைத்து ஜூன் 25-ஆம் தேதிக்குள் நிர்வாக அதிகாரி, கன்னட புத்தக ஆணையம், கன்னடமாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-2 என்றமுகவரிக்கு அனுப்பிவைக்கலாம். 
மேலும் விவரங்களை  ‌w‌w‌w.‌k​a‌n‌n​a‌d​a‌p‌u‌s‌t​a‌k​a‌p‌r​a‌d‌h‌i‌k​a‌r​a.​c‌o‌m  என்ற இணையதளம், தொலைபேசி எண்கள் 080-22484516,22107704 ஆகியவற்றை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com