மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: முதல்வர் குமாரசாமி வலியுறுத்தல்

மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கர்நாடகத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்குமாறு மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கர்நாடகத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்குமாறு மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுதில்லியில் ராஜ்நாத் சிங்கை  திங்கள்கிழமை சந்தித்து குமாரசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வறட்சி,  வெள்ளம்,  ஆலங்கட்டி மழை,  கூடுதல் மழை, மின்னல் போன்ற பல்வேறு வகையான இயற்கை பேரிடர்களின் பாதிப்பு வளையத்தில் கர்நாடகம் உள்ளது. 
கடந்த 17 ஆண்டுகளில் வெவ்வேறு தீவிரங்களில் கர்நாடகத்தில் 13 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது.  மாநில பேரிடர் நிவாரண நிதி (எஸ்டிஆர்எஃப்) ஒதுக்கீட்டில்  2015-16 முதல் 2019-20-ஆம் ஆண்டுவரையிலான காலக்கட்டத்துக்கு (5 ஆண்டுகள்) கர்நாடகத்திற்கு ரூ.1,527கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
ஆனால் மகாராஷ்டிரம்,  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,குஜராத் மாநிலங்களுக்கு முறையே ரூ.8,195 கோடி, ரூ.6,094 கோடி, ரூ.4,847 கோடி, ரூ.3,394 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, கர்நாடகத்துக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின் ஒதுக்கீட்டை ரூ.3,050.72 கோடியாக உயர்த்த வேண்டும். 2016-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி கர்நாடக அரசு அளித்திருந்த ஒட்டுமொத்த கோரிக்கை மனுவில், வறட்சியின் பாதிப்புகளை சீர்செய்வதற்கு மத்திய அரசின் நிதிஉதவியாக ரூ.12,272.21 கோடி ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. 
தற்போது 15-ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பேரிடர் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மாநில பேரிடர் நிவாரணநிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும்" என்றுஅதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுகொண்ட  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுதொடர்பாக பரீசிலனை செய்வதாக கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com