சிற்பக்கலை ஆய்வு உதவித் தொகைக்கு  ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சிற்பக்கலை ஆய்வு உதவித்தொகையை பெற ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று  கர்நாடக சிற்பக்கலை அகாதெமி தெரிவித்துள்ளது.

சிற்பக்கலை ஆய்வு உதவித்தொகையை பெற ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று  கர்நாடக சிற்பக்கலை அகாதெமி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகாதெமி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-
கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் சிற்பக் கலை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது.  
இதற்காக சிற்பக் கலையில் சாதனை படைத்து சிற்பக்கலை தொடர்பாக ஆய்வுமேற்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட,  பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  சிற்பக்கலை ஆராய்ச்சி 6 மாதங்களாக இருக்க வேண்டும். சிற்பக்கலை சார்ந்த எந்தத் தலைப்பிலும் ஆய்வுப்பணியை மேற்கொள்ளலாம். இது தொடர்பான ஆய்வுநோக்கை 4-5 பக்கங்களில் எழுதி, விண்ணப்பங்களை ஏப்ரல் 7-ஆம்  தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். 
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 10 பேர்,  பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் என 15 பேர் ஆய்வுப் பணிக்கான உதவித்தொகை பெற நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
இதில் தேர்வானவர்களுக்கு மூன்று தவணைகளில் ரூ.1 லட்சம் உதவித்தொகையாக அளிக்கப்படும். விண்ணப்பங்களை w‌w‌w.‌k​a‌r‌n​a‌t​a‌k​a‌s‌h‌i‌l‌p​a‌k​a‌l​a​a​c​a‌d‌e‌m‌y.‌o‌r‌g என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவாளர், கர்நாடக சிற்பக்கலை அகாதெமி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-2 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.  கூடுதல் விவரங்களுக்கு 080-22278725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com