வட கிழக்குப் பருவ மழைக்காக காத்திருக்கும் சென்னை ஏரிகள்

சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால், தண்ணீர்த் தேவைக்காக வடகிழக்குப் பருவ மழையை அவை எதிர்நோக்கியுள்ளன.
வட கிழக்குப் பருவ மழைக்காக காத்திருக்கும் சென்னை ஏரிகள்

சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால், தண்ணீர்த் தேவைக்காக வடகிழக்குப் பருவ மழையை அவை எதிர்நோக்கியுள்ளன.
செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஆகிய 4 ஏரிகளும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்த 4 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி ஆகும். ஆனால்,
வியாழக்கிழமை நிலவரப்படி, பூண்டி ஏரியில் 87 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 76 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 526 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 725 மில்லியன் கன அடி தண்ணீர் என நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 1,414 மில்லியன் கன அடி (1.4 டிஎம்சி) தண்ணீர் மட்டுமே தற்போது உள்ளது.
நாளுக்கு நாள் சென்னை மக்களின் குடிநீர்த் தேவை அதிகரித்து வருவதால் ஏரிகளின் மொத்த கொள்ளளவில் தற்போது 10 சதவீதம் மட்டுமே இருக்கும் நீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை நகருக்கு நாள் ஒன்றுக்கு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றன.
இதுதவிர தெரு குழாய்கள், லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் 200 கன அடியிலிருந்து 800 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கிருஷ்ணநீர் திறக்கப்பட்டுள்ளதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் இந்த மாத இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வட கிழக்குப் பருவமழை காலத்தில், சென்னையில் உள்ள ஏரிகளுக்கு சராசரியாக 5,000 மில்லியன் கன அடி 6,000 மில்லியன் கன அடி வரை தண்ணீர் கிடைத்து வருகிறது. இதன் மூலம் இந்த நீரைக் கொண்டு டிசம்பர் மாதம் இறுதிவரை சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com