தீபாவளி பட்டாசு விபத்து: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு

பட்டாசு விபத்துகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பட்டாசு விபத்து: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு

பட்டாசு விபத்துகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, தீக்காயம்- பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் நிர்மலா பொன்னம்பலம் ஆகியோர் கூறியது:-
தீபாவளி நேரத்தில் ஏற்படும் பட்டாசு, தீக்காய விபத்துகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென்று ஆண்களுக்கு 5, பெண்களுக்கு 5 படுக்கைகள் என 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை பட்டாசு தீக்காய சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.
சிகிச்சைப் பெறுவோர் குணமடையும் வரை சிகிச்சை பெறும் வகையிலும், தீபாவளி தினத்துக்கு பின்பு பட்டாசு விபத்து ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் இந்த வார்டு கூடுதலாக ஒரு வாரம் இயங்கும்.
24 மணி நேரமும்.. : இந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் கூடுதல் மருத்துவர்கள் பணிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருந்துகள் இருப்பு: சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள், களிம்புகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாகப் பயன்படுத்தும் வகையிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது, 72 பேர் பட்டாசு விபத்தில் காயமடைந்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com